ஜம்முவில் லஷ்கர் தீவிரவாதிகள் கைது

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த ஹபீஸ் அப்துல்லா மாலிக் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கி, ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். புல்வாமா மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் சர்வீர் அகமது மீர் என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர். பந்திபோரா மாவட்டத்தில் சேல்ஸ்மேன் முகமது இப்ராகிம் என்பவரை தீவிரவாதிகள் சுட்டு கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

More