கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாகி, தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை பெருநகரைச் சுற்றிலும் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. இந்த துயரம் மிகுந்த, பேரிடர் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளும், உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளை தீவிரமாக்க வேண்டும். மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து கள விசாரணை நடத்தி, உரிய அரசு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று, நிவாரணம் பெற்றுத் தருவதில் அரசுடன் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: