×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், மழை பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், போக்குவரத்து, நிவாரண உதவிகளை திட்டமிடுதல், மீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை கவனிக்கும் வகையில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து பருவமழை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
அதிகாரிகள் பெயர்    மாவட்டம்
சென்னை போலீஸ் கமிஷனர் டிஜிபி
சங்கர் ஜிவால்    சென்னை மாநகரம்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி    காஞ்சிபுரம்
சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி அம்ரேஷ் புஜாரி    வேலூர்
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜி
கபில் குமார் சி.சரத்கர்    விழுப்புரம்
ஆயுதப்படை கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங்    சேலம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புபு் பிரிவு கூடுதல் டிஜிபி
வன்னிய பெருமாள்    கோவை
காவலர் சமூக நலன் பிரிவு கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ்    திருச்சி
குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்    தஞ்சாவூர்
மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே    திண்டுக்கல்
நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயராம்    மதுரை
ஊர்காவல்படை ஐஜி சுமித் சரண்    ராமநாதபுரம்
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி
அபின் திணேஷ் மோடக்    திருநெல்வேலி
கூடுதல் அதிகாரிகளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி தினகரன், போலீஸ் பயிற்சி பிாிவு ஐஜி அருண் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu government , Tamil Nadu government appoints 12 IPS officers to take precautionary measures against northeast monsoon
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...