தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

சென்னை: தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை காலங்களில் நோய் தொற்று பரவ வாய்ப்பிருப்பதால் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். மேலும் என் தொடர்புடையவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி வேண்டியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இந்த சூழ்நிலையில் மக்கள் தொண்டாற்றும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: