நிவாரண மையங்களில் மொத்தம் 1107 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: மாநகராட்சியின் நிவாரண மையங்களில் 676 ஆண்கள், 430 பெண்கள் உட்பட மொத்தம் 1107 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 3,58,500 உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முறிந்து விழுந்த 95 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மழைநீர் தேக்கம் குறித்து பொதுமக்களிடம் இருந்து 3,084 புகார்கள் பெறப்பட்டது, 188 புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,896 புகார்களை சரி செய்யும் பணி நடந்துவருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More