×

நேரம் குறைவாகவே இருக்கிறது.! புயல் உருவாகிறதோ இல்லையோ மழைக்கான அச்சுறுத்தல் உண்டு; எச்சரிக்கை விடுத்த வெதர்மேன்

சென்னை: கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இதனால் மழையின் தீவிரம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்றும் நாளையும் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் இன்று அதிகாலையில் இருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில்தான் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் இன்று மாலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மழை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா என்று உறுதியாக தெரியவில்லை. அதேபோல் தாழ்வு மண்டலமாக மாறினால் புயலாக உருவெடுக்குமா என்றும் தெரியவில்லை. இது தொடக்க நிலைதான். ஆரம்பத்திலேயே அனைத்தையும் கணிக்க முடியாது. இதனால் தாழ்வு நிலை உருவாவதை வானிலை ஆய்வு மையம் கண்காணிக்க தொடங்கி உள்ளது.

இந்த நிலையில்தான் இந்த தாழ்வு மையம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். அதில், நவம்பர் 10-12 தேதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையை கண்காணிக்க வேண்டும். இந்த தாழ்வு நிலை பெரிய காற்று கொண்ட புயலாக மாறுவதற்கு போதிய அவகாசம் இல்லை. நேரம் குறைவாகவே இருக்கிறது. ஆனால் புயல் உருவாகிறதோ இல்லையோ. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும், அதன் அண்டை மாவட்டங்களிலும் மழைக்கான அச்சறுத்தல் இருக்கிறது. இதையும் பாதுகாப்பாக கடந்து செல்வோம் என நம்புவோம், என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Weatherman , Time is running out! There is a threat of rain whether a storm develops or not; Weatherman warned
× RELATED நெல்லை, குமரி, தூத்துக்குடி,...