×

டி.20 கேப்டனாக இன்று கடைசி ஆட்டம்: வெற்றியுடன் விடைபெறுமா கோஹ்லி-ரவிசாஸ்திரி கூட்டணி!

துபாய்: ஐசிசி டி.20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்று லீக் போட்டி இன்றுடன் முடிகிறது. குரூப் 2 பிரிவில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி போட்டியில் இந்தியா-நமீபியா அணிகள் மோதுகின்றன. முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த இந்தியா அரையிறுதி வாய்ப்பு இழந்தது. பின்னர் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்தை வீழ்த்திய இந்திய அணிக்கு, நேற்று ஆப்கன் நியூசிலாந்தை வென்றிருந்தால் அரையிறுதி வாய்ப்பு இருந்தது. ஆனால் நியூசிலாந்து ஆப்கனை எளிதாக வீழ்த்தியதால் அந்த சிறிய வாய்ப்பும் இல்லாமல் போனது.

டி.20 கேப்டனாக கோஹ்லிக்கு இன்று கடைசி போட்டியாகும். மேலும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கும் இதுதான் கடைசி போட்டி. அடுத்த போட்டியில் இருந்து ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பதவி ஏற்க உள்ளார். இதனால் கடைசி போட்டியில் கோஹ்லி வெற்றியுடன் விடைபெறும் முனைப்பில் உள்ளார். பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுக்காத வருண் சக்ரவர்த்திக்கு பதில் ராகுல் சாஹர் களம் இறங்கலாம். இவை தவிர, பும்ரா, ஷமிக்கு இன்று ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது. ஷர்துல்தாகூர், புவனேஸ்வர்குமார் ஆடும் லெவனில் இடம் பிடிக்கலாம்.

Tags : Kohli-Ravi Shastri , Kohli-Ravi Shastri alliance to bid farewell to victory
× RELATED சில்லிபாயின்ட்..