அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் தொடர் கனமழை முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்தது

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் தொடர் கன மழையின் காரணமாக முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்து போயுள்ளன. இதனால் அடுத்த சீசனுக்கு முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் முருங்கை காய் அறுவடை செய்ய இயலாமல் நஷ்டம் ஏற்படும்நிலை உள்ளது.அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது.

இப்பகுதி முருங்கை காய்திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தில் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கைகாய்க்கு தனி மவுசு உள்ளது.ஆகையால் மலைக்கோவிலூர், ஈசாத்தம், இந்திராநகர், பள்ளக்பட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர் கன மழையின் காரணமாக முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்து போயுள்ளன. இதனால் அடுத்த சீசனுக்கு முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் முருங்கை காய் அறுவடை செய்ய இயலாமல் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.

இதன் காரணமாக முருங்கை விவசாயிகளுக்கு பணப் பயனில்லாத சிரமமான சூல்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More