×

கிடுகிடு வென உயரும் நீர்மட்டம்; 90 சதவீத கொள்ளளவை எட்டிய புழல் ஏரி: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

சென்னை அடுத்த புழல் ஏரியில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு உபரி நீரை பொதுப்பணித்துறையினர் திறந்தனர். இன்று 90 சதவீத கொள்ளளவை புழல் ஏரி எட்டியது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் 2,916 மில்லியன் கன அடி நீர் உள்ளது. புழல் ஏரியின் 2 மதகுகள் வழியாக 2 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 1,357 கனஅடியாக உள்ளது.  புழல் ஏரியில் இருந்து நேற்று முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி  உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,872 மில்லியன் கன  அடி  நீர் உள்ளது.

புழல் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் 13.5 கி.மீ. தூரம் சென்று எண்ணூரில் வங்கக்கடலில் கலக்கிறது. நீர்வரத்து 1,487 கன  அடியாக உள்ள நிலையில் குடி நீருக்காக 191 கன அடி  நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் செல்லும் கால்வாய் வழியே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னையில் உள்ள முக்கிய ஏாிகள் நிரம்பி வருகின்றனர். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

Tags : Phuhl Lake , On the second day, MK Stalin, in person, inspected the field
× RELATED புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும்...