×

நீண்ட கால நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணகூடலூர், பந்தலூர் மக்களை சந்தித்து காங்கிரஸ் கமிட்டி எம்எல்ஏக்கள் மனுக்களை பெற்றனர்-முதல்வரை சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத பிரச்னையாக பிரிவு 17 நிலப்பிரச்னை உள்ளது. இதுதவிர தனியார் வனச் சட்டம், வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதில் ஆகியவைகள் உள்ளன. நீண்டகால பிரச்னைக்கு தீர்வு காண காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் துணைத்தலைவர் ராஜேஷ், கொறடா விஜயதாரணி மற்றும் எம்எல்ஏக்கள்  பிரின்ஸ் - கன்னியாகுமரி, கணேஷ் - ஊட்டி, ராதாகிருஷ்ணன்- விருத்தாசலம், ரூபி மனோகர் - நாங்குநேரி ஆகிய 7 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் நேற்று கூடலூர் பகுதியில் பிரிவு 17 உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் சிறு குறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.  

ஓவேலி, தேவர் சோலை பேரூராட்சிகள், ஸ்ரீ மதுரை, நெலாக்கோட்டை, சேரங்கோடு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த குழுவினர் நேரில் சென்று மக்களிடம் மனுக்களை பெற்றனர். இந்த மனுக்களை பரிசீலித்து அதன் அடிப்படையில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கூடலூர் பகுதி மக்களின் நீண்டகால பிரச்னைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசு மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க உள்ளதாக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.

கூடலூர் பகுதியில் கடந்த 1969ம் ஆண்டில் அரசுடமையாக்கப்பட்ட ஜமீன் நிலங்கள் 80 ஆயிரம் ஏக்கரில் முதல் கட்டமாக 28 ஆயிரம் ஏக்கர் விவசாய  நிலங்களுக்கு 1972ம் ஆண்டு திமுக ஆட்சியில்  பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வனமாகவும், தனியார் தோட்டங்களாகவும், சிறு குறு விவசாயிகளின் விவசாய நிலங்களாகவும் அடங்கி உள்ளது. விவசாயிகள் காலம் காலமாக தங்கள் உழுது பயிரிட்டு விவசாயம் செய்துவரும் நிலத்திற்கு உரிமை கோரி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதே காலகட்டத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் அரசுடமையாக்கப்பட்ட ஜமீன் நிலங்கள் அப்போதே தீர்வு காணப்பட்டு அங்கு வசித்த விவசாயிகளின் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு மீதம் உள்ள நிலங்கள் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்டது. கூடலூர் பிரிவு 17 நிலப்பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் கடந்த 1998 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் இரு முறை சம்பந்தப்பட்ட பிரச்னைக்குரிய நிலங்களை வரைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்தது.
 
இந்த நிலங்களை அரசு ஏற்று எடுத்தது செல்லும் என்றும், இது தமிழக அரசுக்கு சொந்தமான நிலம் என்றும் தீர்ப்பு வழங்கியது. மேலும் தற்போதைய பிரச்னைக்குரிய 52 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு வனத்துறைக்கு ஒப்படைக்க வேண்டும். மீதமுள்ள நிலங்களை அரசு மனிதாபிமான அடிப்படையிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையிலும் தீர்வு காண வேண்டும் என்று வழிகாட்டுதலில் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஓவேலி மற்றும் இதர பகுதிகளில் இருந்து 17 ஆயிரம் ஏக்கர் நிலம் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள இந்த நிலங்களில் பெருந்தோட்ட நிலங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் தங்களது நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கடந்த பல வருட காலமாக கோரிக்கை வைத்துப் போராடி வருகின்றனர். மேலும் இந்த நிலங்களில் வீடு கட்டி வசித்து வரும் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் மின் இணைப்பு கோரி காத்திருக்கும் காத்திருக்கின்றனர். இதேபோல் கூடலூர் சுற்றுவட்டப் பகுதியில் பெரும்பாலான பட்டா நிலங்கள் தனியார் வன பாதுகாப்பு சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

இதில் 5 ஏக்கருக்கும் குறைவான நிலங்களும் உட்படுத்தப்பட்டு உள்ளதால் சிறு குறு விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.  தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து 5 ஏக்கருக்கும் குறைவான நிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  இந்த மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் மாநில பொதுக் குழு உறுப்பினர்  கே.பி. முகமது,   துணைத்தலைவர்கள் -சாஜிசளிவயல், குஞ்சாபி, அம்சா மாவட்ட செயலாளர்கள் உண்ணி கம்மு, சம்சுதீன் வட்டார காங் தலைவர். அசரப், நகர தலைவர் அப்துல் ரகுமான், மற்றும் சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congressional Committee ,Bandalur , Kudalur: Nilgiris District Kudalur, Bandalur area has been an unresolved issue for more than 50 years Section 17
× RELATED அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை...