×

குத்தாலம் அருகே கைதொடும் தூரத்தில் மின்கம்பிகள்-பொதுமக்கள் அச்சம்

குத்தாலம் : அசிக்காடு செல்லும் சாலையில் தாழ்வாக உள்ள மின்கம்பியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மல்லியம் முதல் அசிக்காடு வரை செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள மின்கம்பங்களில் உள்ள மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக இருப்பதால் சாலையில் செல்பவர்கள் கையால் தொடும் அளவிற்கு இருக்கிறது. இதுபோலவே இந்த சாலையில் இரண்டு இடங்களில் மின்கம்பிகள் ஆனது தாழ்வாகவே உள்ளது.

தற்போது கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகின்ற சூழலில் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் மின் கம்பிகளால் பாதிப்பு ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே இந்த மின் கம்பிகளை உடனே சரியான உயரத்தில் இழுத்து சரி செய்து தருமாறு இப்பகுதி மக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumbalam , Kuthalam: Public demand to repair the power line at the bottom of the road leading to Asikkadu
× RELATED இடியுடன் கனமழை