×

வாணியம்பாடியில் விளைநிலங்கள் அருகே மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்ட ரசாயனக்கழிவுகள்!: விவசாயிகள் அதிர்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விளைநிலங்களுக்கு அருகே மூட்டை, மூட்டையாக ரசாயனக்கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கொய்யான்கொல்லை பகுதியில் சுமார் 100 ஏக்கரில் நெல், கேழ்வரகு மற்றும் வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் விளைநிலங்களுக்கு அருகே ரசாயனக் கழிவுகள், தோல் கழிவுகள், ஆட்டின் உரோமங்கள் மற்றும் அகர்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனத் துகள்கள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் மூட்டை, மூட்டையாக கொட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.

அந்த ரசாயனக் கழிவுகள் விளைநிலங்களை சூழ்ந்து பயிர்கள் அழுகி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் தொழிற்சாலைகளில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுகள், இதுபோன்ற திறந்தவெளிகளில் கொட்டப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளார்கள். ரசாயனக் கழிவுகளில் பாசன நீரின் தன்மை மாறுவதோடு பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


Tags : Vaniyambadi , Vaniyambadi, arable land, chemical wastes
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...