×

கலசபாக்கம் அருகே மழையால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்-விவசாயிகள் வேதனை

கலசபாக்கம் :  கலசபாக்கம் அருகே தொடர் மழையால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமானதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறு, கால்வாய்களில் தண்ணீர் செல்கிறது. மேலும் கலசபாக்கம் பகுதியை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் நிரம்பி வழிகிறது.

பல இடங்களில்  நீர்நிலைகள், கால்வாய் பகுதிகளையொட்டி உள்ள விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.இந்நிலையில், கலசபாக்கம் பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக தென்பள்ளிப்பட்டு, பில்லூர், காலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதமாகியுள்ளது.இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சேதமான நெற்பயிர்களை  அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kalasapakam , Kalasapakkam: Farmers near Kalasapakkam are suffering as 50 acres of paddy fields have been damaged due to continuous rains.
× RELATED முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி: மின்சாரம் பாய்ந்து இருவர் பலி