×

பருவமழையின்போது சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை; 1 லட்சம் கம்பங்கள் தயார் நிலையில் வைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: பருவமழையின்போது சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியளித்தார். சென்னையில் ஒரு துணை மின் நிலையத்தில் மட்டுமே மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். கனமழை காரணமாக 12,237 மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் 1 லட்சம் கம்பங்கள் தயயர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், பல இடங்களில் மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று பெய்த கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தியணைப்புத்துறை அறிவுறுத்தலின்படி சென்னையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதவும் தேங்கிய மழை நீரை அகற்றிய பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது என கூறினார். மின் இணைப்புகளில் ஏற்பட்ட கோளாறுகளை சீர் செய்யும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். வேறு எதும் உதவி வேண்டும் என்றால் அரசால் அறிவிக்கப்பட்ட இலவச உதவி எண்களுக்கு அழைத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸடாலின் மக்களுக்கு தேவையான உதவிகளை உடனே செய்ய நடவடிக்கை எடுக்க அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்தார். அரசின் முயற்சியால் அனைத்து அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளதாக பேட்டியளித்தார்.


Tags : Minister ,Senthilpalaji , Interview with monsoon, balanced, power supply, Senthilpology
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...