×

தொடர் மழை எதிரொலி!: கடலூர் அருகே ரூ.28.7 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை 8 மாதங்களில் விரிசல்..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே 28 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை 8 மாதங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2,206 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் தடுப்பணையின் இருபுறத்திலும் கட்டப்பட்ட சிமெண்ட் கட்டைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தடுப்பணை பலவீனம் அடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் தடுப்பணை உடையும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கரைகள் உடைந்து வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே தடுப்பணையை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Cadalur , Cuddalore, dam, cracks
× RELATED கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி:...