×

ஈராக் பிரதமர் வீடு மீது டிரோனில் குண்டு வீச்சு: தேர்தல் முடிவு காரணமா?

பாக்தாத்: ஈராக் பிரதமர் முஸ்தபா அல் கதிமி வீட்டின் மீது டிரோன் மூலம் வெடி பொருட்கள் வீசி அவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. ஈராக் முன்னாள் பிரதமர் ஆதில் அப்துல் மற்றும் அவரது அமைச்சரவையை கலைக்கக் கோரி, கடந்த மே மாதம் நாடு தழுவிய போராட்டம் நடந்தது. இதனால், ஈராக் புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்த முஸ்தபா அல் கதிமியை புதிய பிரதமரமாக அந்நாட்டு அதிபர் பர்காம் சாலே நியமித்தார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 10ம் தேதி ஈராக்கில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஈரான் ஆதரவு அரசியல் அமைப்புகள் தோல்வி அடைய, முஸ்தபா அல் கதிமி கட்சி பெற்றது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக ஈரான் ஆதரவு அமைப்புகள் தலைநகர் பாக்தாத்தில் கடும் போராட்டத்தை நடத்தின.

பிரதமர் இல்லம் அமைந்துள்ள பசுமை மண்டலப் பகுதியில் வன்முறை நிகழ்ந்தது. தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ளாத அமைப்புகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், அதிக பாதுகாப்பு நிறைந்த பிரதமர் கதிமி வீட்டில் மீது மர்ம நபர்கள் நேற்று டிரோன் மூலம் வெடி பொருட்களை வீசினர். இதில், பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் காயமடைந்தனர். பிரமதர் கதிமி காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் கதிமி கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஈரான் ஆதரவு கிளர்ச்சிப் படைகள் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Tags : PM , Drone bombing of Iraqi PM's house: Is it because of election results?
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!