மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு பாதுகாப்பை வாபஸ் பெறுவதா? எடப்பாடி கண்டனம்

சென்னை: மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாபஸ் பெற்றதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகத்துக்கு, கடந்த 2006ம் ஆண்டு முதல் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் கடந்த 6 மாதங்களாக பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் காவல்துறை பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டது உள்நோக்கத்துடன் நிகழ்ந்ததாக சந்தேகம் எழுகிறது. மேலும் அதிமுக தொண்டர் முருகானந்தம் கொலை வழக்கு வருகிற 19ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தான் நடந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இது கண்டிக்கதக்கது. சி.வி.சண்முகம் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்றால் அதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: