எனது வாகன பயணத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது: கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்

சென்னை: தமிழக கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், சைலேந்திர பாபு, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று (6.11.2021) ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். சந்திப்பின்போது, ஆளுநரின் பயணத்தின்போது பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்று ஆளுநர் வலியுறுத்தினார். மேலும், ஆளுநரின் பயணத்தின்போது பொதுமக்களுக்கு எவ்வித  இடையூறும் ஏற்படாத வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம், ஆளுநர்  அறிவுறுத்தினார்.

Related Stories:

More