திருத்தணி நகராட்சியில் வாக்காளர் பட்டியல் வெளியிடு

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆணையர் வெளியிட்டார். தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், திருத்தணி நகராட்சிக்கான நகராட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 13 பெண் வாக்குச்சாவடி மையங்களும், 13 இருபாலர் வாக்குச்சாவடி மையங்கள் 16 என மொத்தம் 42 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், 17,729, பெண் வாக்காளர்களும், 18,989 ஆண் வாக்களார்களும், இதர வாக்காளர்கள் 8 என மொத்த 36 ஆயிரத்து 726 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று வரையறுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை திருத்தணி நகராட்சி ஆணையர் பிரீத்தி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது, அவருடன் நகராட்சி மேலாளர் குழந்தை தேவராஜ், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தயாநிதி, நகராட்சி கணக்காளர் நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: