சோழன் கல்வியியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள சோழன் கல்வியியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அன்பு தலைமை வகித்து, லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். உதவி பேராசிரியர் சச்சிதானந்தம் வரவேற்று பேசினார். இதில் கலந்துகொண்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது அவர்கள், ‘அனைத்து செயல்களிலும் நேர்மையையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன். லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன். தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்தி முன்னுதாரணமாக செயல்படுவேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பயிற்சி ஆசிரியர்கள் பவித்ராஜ், ரூபிணி, சத்யப்பிரியா, பிரீத்தி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் உதவி பேராசிரியர்கள் பெருமாள், இளங்கோ மற்றும் மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியை தேவி நன்றி கூறினார்.

Related Stories:

More