அன்னவாசல் பகுதியில் தொடர் மழைக்கு புளியமரம் சாய்ந்தது

விராலிமலை: அன்னவாசல் பகுதிகளில் தொடர்மழை காலாடிப்பட்டியில் சாலையோரத்தில் நின்ற புளியமரம் வேரோடு சாய்ந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அன்னவாசல், இலுப்பூர், சித்தன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, நார்த்தாமலை, குடுமியான்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அன்னவாசல் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று (சனிக்கிழமை) காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. அப்போது புதுக்கோட்டை- இலுப்பூர் சாலையில் காலாடிப்பட்டி என்னும் இடத்தில் சாலையோரத்தில் இருந்த பெரிய புளிமரம் ஒன்று வோரோடு சாய்ந்தது. சாய்ந்த புளியமரம் சாலைக்கு வெளிபுறத்தில் பக்கவாட்டில் சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: