×

முல்லை பெரியாறு அணையை எந்தெந்த தேதியில் சென்று ஓபிஎஸ் பார்த்தார் என்பதை குறிப்பிடுவாரா? நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி

சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லை பெரியாறு அணைக்கு சென்று கடந்த 5ம் தேதி பார்வையிட்டு விட்டு வந்த போது, அங்கிருந்த  நிருபர்கள் முல்லை பெரியாறு அணை சம்பந்தமாக என்னிடம் சில கேள்வி கேட்டனர். அதில் ஒருவர், முல்லை பெரியாறு அணை சம்பந்தமாக ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருக்க போவது குறித்து கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு பதில் சொல்லும் போது தான் ஓபிஎஸ்ஸோ அல்லது இபிஎஸ்ஸோ ஒரு முறையாவது இந்த அணைக்கு சென்று பார்த்திருக்கிறீர்களா? 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சியில் இருந்தும் ஒரு முறை கூட இந்த அணையை இந்த இரண்டு முன்னாள் முதல்வர்களும் சென்று பார்க்கவில்லை. அப்படி ஒரு முறையும் சென்று முல்லை பெரியாறு அணையை பார்க்காதவர்களுக்கு இந்த அணையை முன்வைத்து போராட்டம் நடத்த தார்மீக உரிமையும் இல்லை என்று சொன்னேன்.

என் கருத்துக்கு பதில் அளித்து ஓபிஎஸ் நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் நானா முல்லை பெரியாறு அணைக்கு போகவில்லை. 14 தடவை போயிருக்கிறேன் என்று நறுக்கென்று இதற்கு பதில் அளித்து விட்டு விட்டு வேறு எதை எதையோ அறிக்கையில் எழுதியிருக்கிறார். அதில் எல்லாம் உப்பில்லை சப்பில்லை என்று விட்டு விடுகிறார். இந்த 14 தடவை முல்லை பெரியாறுக்கு அணைக்கு சென்றேன் என்கிறாரே எதிர்க்கட்சி துணை தலைவர். அது  எந்தெந்த தேதிகளில் என்று குறிப்பிடுவாரா?  நான் தேதி எல்லாம் குறித்து வைக்கவில்லை என்று ஓபிஎஸ் சொல்லலாம். தேதிகளை இவர் குறித்து வைக்கா விட்டாலும் பொதுப்பணித்துறை இலாகாவில் குறித்து வைத்திருப்பார்கள். எந்தெந்த தேதிகளில் என்னென்ன நடந்தது. யார், யார் கலந்து கொணடனர். என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதையெல்லாம் தேதி வாரியாக குறிப்பு எழுதி வைப்பது இலாகாவில் நெடு நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம். அந்த குறிப்பை காலண்டர்கள் என்பார்கள். முல்லை பெரியாறு அணைக்கு சென்று வந்ததற்கு ஆதாரமாக என்ன சொல்கிறார் ஓபிஎஸ் என்றால் நான் ஒரு முறை தண்ணீர் திறந்து வைப்பதற்கு போய் பூ தூவி தண்ணீரை திறந்து வைத்து விட்டு வந்தேன்.

எல்லா அணைகளிலும் அணையின் மேலிருந்து தான் தண்ணீரை திறப்பார்கள். ஆனால், முல்லை பெரியாறு அணையில் ஒரு விசித்திரம். தண்ணீர் திறக்கிற போது அணைக்கு போக  தேவையில்லை. அணையினுடைய பின்பகுதியில் இருந்து தான் தண்ணீரை திறப்பார்கள். ஏனென்றால் நாம் அணையின் முன்பகுதியில் இருந்து தண்ணீர் எடுப்பதில்லை. பின் பகுதியில் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து, அதில் மின்சாரம் தயாரிக்கப்பட்ட பின்னர் அது பாசனத்துக்கு விடப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் அணையின் நீரை தொட்டு விட்டு வந்திருக்கிறாரே தவிர அணையினை கண்டு விட்டு வரவில்லை. போட்ட வழக்குக்கு பல மாதங்களாக நம்பர் கூட வாங்காத அவங்க அம்மாவை தான் முல்லை பெரியார் காத்த அம்மணி என்கிறார் ஓபிஎஸ்.


Tags : Mulla Periaru Dam ,Water Resources ,Minister ,Durimurugan , Can you mention the date on which the OPS visited the Mulla Periyar Dam? Water Resources Minister Duraimurugan retaliated
× RELATED டெல்லியில் 29-வது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடங்கியது