தொடர் விடுமுறை எதிரொலி: பண்ணாரியம்மன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

சத்தியமங்கலம்: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள்  குவிந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் நேற்று பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

காலை முதலே கோயிலுக்கு வர தொடங்கிய பக்தர்கள் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பண்ணாரி அம்மனை வழிபட்டனர்.குண்டத்தில் உப்பு மிளகு தூவியும் வேல் கம்பத்தில் எலுமிச்சை கனிகள் குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Related Stories:

More