தென் ஆப்ரிக்கா வெற்றி

ஷார்ஜா: ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. ஹெண்ட்ரிக்ஸ் 2 ரன் எடுத்து வெளியேற, டி காக் - வாண்டெர் டஸன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்தது. டி காக் 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டஸனுடன் மார்க்ரம் இணைந்தார். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்க, தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. டஸன் 94 ரன் (60 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), மார்க்ரம் 52 ரன்னுடன் (25 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன் மட்டுமே எடுத்து தோற்றது. மொயின் அலி அதிகபட்சமாக 37 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். இந்நிலையில் 20வது ஓவரை வீசிய ரபாடா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். அவரது ஓவரில் வோக்ஸ் (7), மோர்கன்(17), ஜோர்டன்(0) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். 20வது ஓவர் முடிவில் அடில் ரஷித் 2ரன், மார்க் உட் 1 ரன் எடுத்து ஆவுட் ஆகாமல் இருந்தனர். 10 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 3 விக்கெட், டிவைன், ஷாம்சி ஆகியோர் தலா 2  விக்கெட் எடுத்தனர். முதல் பிரிவில் இங்கி., ஆஸி. தென் ஆப்ரிக்கா தலா 8 புள்ளிகள் பெற்ற நிலையில், ரன் ரேட் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

Related Stories:

More