இருங்காட்டுகோட்டை- சிப்காட் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

சென்னை: மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணி நடைபெற உள்ளதால் இருங்காட்டுக்கோட்டை - சிப்காட் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டம் இருங்காட்டு கோட்டை துணைமின் நிலையத்தில் இன்று பழைய மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, சிப்காட் இருங்காட்டுகோட்டையின் ஒரு சில பகுதி மற்றும் தண்டலம் பிரிவு அலுவலகத்தை சார்ந்த பகுதிகளான கீவலூர் குப்பம், மேவலூர் குப்பம், செட்டிபேடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: