×

செங்கல்வராயன் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த உ.வேரி சத்திரம் பகுதியில் உள்ள செங்கல்வராயன் பொறியியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பூபதி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் அறக்கட்டளை தலைவருமான கலையரசன் தலைமை தாங்கினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் பேசுகையில், மாணவர்கள் தங்களுடைய முழு நேரத்தையும் செல்போனில் செலவழிக்கின்றனர். நாளொன்றுக்கு 8 மணி நேரம் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்குவது அவர்களின் கவனத்தையும், எண்ணங்களையும் சிதைத்து கொண்டு இருக்கிறது. மது மற்றும் போதை பழக்கத்தினால் மாணவர்கள் வாழ்க்கை வீணாகி போகிறது. இதுபோன்ற பழக்கங்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார். இதில், மாணவர்கள், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் டாக்டர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags : Chengalvarayan College , Welcome program for first year students at Chengalvarayan College
× RELATED பிரபல நகைக்கடையில் 28.50 கிலோ தங்க காசு...