×

பாலாற்று பகுதியில் மணல் கடத்தல் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், பாலாற்றில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும், தனியார் மணல் குவாரிகள் உள்ளன. இங்கு 10அடி முதல் 25அடி வரை அரசு விதிகளை மீறி பாலாற்றில் மணல் எடுத்தனர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளை ஏற்று நீதி மன்றமும், மாவட்ட நிர்வாகமும் பாலாற்றில் மணல் எடுக்க கடந்த 2012ம் ஆண்டு முதல் தடை விதித்தது. ஆனாலும் பாலாற்றில் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பொதுப்பணித்துறை, நீர் ஆதராத்துறை சார்பில் மணல் கொள்ளையை தடுக்கவும் மணல் கொள்ளை நடைபெறும் இடங்களை கண்காணிக்கவும், செங்கல்பட்டு உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தலைமையில், டிரோன் கேமரா மூலம் செங்கல்பட்டு மாவட்ட பாலாற்று பகுதிகளான ஆத்தூர், திம்மாவரம், மாமண்டூர், உதயம்பாக்கம், மணப்பாக்கம், வள்ளிபுரம் பாலாற்று பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும், தொடர் மணல் கடத்தல் நடைபெறும் இடங்கள், அதனால் ஏற்பட்ட பள்ளங்கள் மணல் கடத்தும் தடங்களை கண்டுபிடித்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுப்பனித்துறையினர் கூறுகையில், டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பதால், பாலாறு முழுவதும் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல்,  நீரோட்டம், மணல் திட்டு, மணல் கடத்தல் ஆகியவை  தெரிகிறது. இதனால் மணல் கடத்தலை முழுவதுமாக கண்காணித்து கட்டுபடுத்த முடியும்.’’ என்றனர்.

Tags : Milky Way , Surveillance by sand smuggling drone in the Milky Way
× RELATED இந்த வார விசேஷங்கள்