×

தீரன் சின்னமலை கலை அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொங்கு வேளாளர் அறக்கட்டளை நிர்வாகிகள் நன்றி

சென்னை: தீரன் சின்னமலை கலை அறிவியல் கல்லூரி தொடங்கிட அனுமதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை கொங்கு வேளாளர் அறக்கட்டளை நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை, தலைமை செயலகத்தில், கே.சுப்பராயன் எம்பி, கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி, செயலாளர் எஸ்.கோவிந்தப்பன் மற்றும் நிர்வாகிகள்சந்தித்து, வீரர் தீரன் சின்னமலை பெயரில் மகளிர் கல்லூரி அமைக்க உதவியதற்காக நன்றி தெரிவித்தார்கள்.  திருப்பூர் - அங்கேரிபாளையம் சாலையில், கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் சுமார் 4000 ஏழை எளிய மாணவ, மாணவிகள் மிக குறைந்த கட்டணத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணாக்கர்களின் மேற்படிப்பிற்காக திருப்பூர் மாவட்டம், அவினாசி - வஞ்சிபாளையம் நெடுஞ்சாலையில், கொங்கு வேளாளர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் தீரன் சின்னமலை கலை அறிவியில் கல்லூரி என்ற பெயரில் புதிய மகளிர் கல்லூரி தொடங்கிட, விவசாய நிலத்தை, கல்வி பணிக்காக மாற்றித் தர கோரி கடந்த நான்கு ஆண்டாக முயற்சிகள் மேற்கொண்டும் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், ஒரே வாரத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு கண்ட முதல்வரை  கொங்கு வேளாளர் அறக்கட்டளை நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.

Tags : Kongu Farmers' Trust ,Chief Minister ,MK Stalin ,Deeran Chinnamalai College of Arts and Sciences , Kongu Farmers Trust executives thank Chief Minister MK Stalin for giving permission to start Deeran Chinnamalai College of Arts and Sciences
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...