திமுக அயலக அணி பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:  திமுக அயலக அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ வெளியிட்ட அறிவிப்பு: உலகமெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களை ஒருங்கிணைத்து தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கும் ஆட்சியுடன் நேரடி தொடர்பில் இருப்பதற்காகவும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் குறைகளை தீர்க்கும் ஒரு நோக்கத்துடன் வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் துவங்கப்பட்டுள்ளது. இந்த பல நாடுகளில் அமையப்பெற்றுள்ள இந்த சங்கத்தின் கிளைகளில் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு திமுக அயலக அணி தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. சிங்கப்பூர் பொறுப்பாளராக- நரசிம்மன் நரேஷ், ஜப்பான்- வி.குன்றாளன், ஐக்கிய அரபு அமீரகம் - மீரான், ஓமன் - சிவக்குமார், குவைத்- தியாகராஜன், சவுதி அரேபியா-பிரேமானந்த், இங்கிலாந்து-முகம்மது பைசல், ஜெர்மனி - மஹாவீர் பிரசாத் பிச்சைமணி, போலந்து-யோகேஸ்வரன், காமராஜ், வியட்நாம்-வேதா, தன்சானியா-ப்ரூஸ் லீ ரூபன், மெக்சிகோ-கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More