டஸன்-மார்க்ரம் அதிரடி தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு

ஷார்ஜா: இங்கிலாந்து அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (பிரிவு 1), வாண்டெர் டஸன் - எய்டன் மார்க்ரம் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், டி காக் இருவரும் தென் ஆப்ரிக்க இன்னிங்சை தொடங்கினர். ஹெண்ட்ரிக்ஸ் 2 ரன் எடுத்து மொயீன் சுழலில் கிளீன் போல்டானார். டி காக் - வாண்டெர் டஸன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்தது. டி காக் 34 ரன் எடுத்து ரஷித் சுழலில் ராய் வசம் பிடிபட்டார்.

அடுத்து டஸனுடன் மார்க்ரம் இணைந்தார். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்க தென் ஆப்ரிக்கா ஸ்கோர் எகிறியது. டஸன் 37 பந்தில் அரை சதம் அடிக்க, மார்க்ரம் 24 பந்தில் 50 ரன் எடுத்தார். தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. டஸன் 94 ரன் (60 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), மார்க்ரம் 52 ரன்னுடன் (25 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 20 ஓவரில் 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

* பிரியாவிடை...

வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரங்கள் கிறிஸ் கேல், டுவைன் பிராவோ இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நேற்று ஓய்வு பெற்றனர். தாய்நாட்டுக்காக கடைசி போட்டியில் விளையாடிய இருவரும் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினர்.

Related Stories:

More