புதுச்சேரியில் நாளை முதல் ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் முதல் மூடப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் மட்டும் திறக்கப்பட்டன. தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் கடந்த 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு விட்டன. புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (8ம் தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகங்கள் கடைபிடிக்க வேண்டிய கோவிட் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

Related Stories:

More