×

நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை ஒரு வாரத்தில் நிரம்பும்

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர் பிடிப்புபகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரு நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 15,740 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 26,000 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், நேற்று முன்தினம் காலை 113.59 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 114.46 அடியாகவும், மாலையில் 114.90 அடியாகவும் உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்தாலும், மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது.


Tags : Mattore Dam , The Mettur Dam will fill up in a week due to the increase in water level
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.29 அடியில் இருந்து 75.76 அடியாக உயர்வு