×

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையொட்டி விதிகளை மீறி பட்டாசு வெடித்த 2,278 பேர் மீது வழக்கு: சென்னையில் 1,008 பேர் சிக்கினர்; போலீசார் நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையொட்டி அரசு அனுமதித்த  நேரத்தை கடந்து, பட்டாசு வெடித்ததாக 2,278 பேர் மீதும், சென்னையில் 1,008 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர். காற்று மற்றும் ஒலி மாசை கட்டுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்பட, தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. மேலும், அரசு அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அரசின் அறிவுறுத்தலை மீறி பலரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பலர் பட்டாசு வெடித்தனர். இதையடுத்து அரசின் அறிவுறுத்தலை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக 2,278 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 2,200 பேர் கைது  செய்யப்பட்டு ஜாமீனில் விடுக்கப்பட்டனர். அதைப்போன்று சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை  கடந்து பட்டாசுகள் வெடித்ததாக கடந்த இரண்டு நாட்களில் 1,008 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 1,014 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 980 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் வடக்கு மண்டலத்தில் 303 வழக்குகள் பதிவு செய்து 296 பேரும், மத்திய மண்டலத்தில் 60 வழக்குகள் பதிவு செய்த நிலையில் 51 பேரும், மேற்கு மண்டலத்தில் 466 வழக்குகள் பதிவு செய்து 456 பேரும், தெற்கு மண்டலத்தில் 233 வழக்குகள் பதிவு செய்து 246 பேர் கைது செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Deepavali ,Tamil Nadu ,Chennai , 2,278 prosecuted for illegally exploding firecrackers during Deepavali across Tamil Nadu: 1,008 trapped in Chennai; Police action
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...