வத்திராயிருப்பு: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பாதையில் ஆபத்தான ஓடைகளில் இரும்பு பாலம் மற்றும் கைபிடிகள் அமைக்க வனத்துறையினர் ஆய்வு செய்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 4500 அடி உயரத்தில் சதுரகிாி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. அமாவாசை, பவுா்ணமி ஆகியவற்றிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோசத்திற்கு 1 நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோயிலுக்கு செல்லும் வழியில் மாங்ேகனி ஓடை, எழும்பு ஓடை, சங்கிலி பாறை ஓடை, பிலாவடி கருப்பசாமி ஓடை, வௌ்ளப்பாறை ஓடை, சுந்தரமகாலிங்கம் கோயில் சன்னதிக்கு எதிரே உள்ள ஓடை, கோயிலுக்கு செல்லும் ஓடை என 7 ஓடைகள் உள்ளன.
மழை காலங்களில் இந்த ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி கிடையாது. இந்த 7 ஓடை பாலங்கள், வழுக்குப்பாறை கோணத்தளவாசல்மேடு, சங்கிலிப்பாறை மேடு, ரெட்டலிங்கம் மேடு, நாவல் ஊற்று மேடு வழியாக ஆபத்தான முறையில் பக்தர்கள் கோயிலுக்கு சென்று வந்தனர். இதையடுத்து ஏற்கனவே இந்து சமய அறநிலைய சாா்பில் 7 ஓடைகளில் இரும்பு பாலம், மற்ற இடங்களில் இரும்பு கைபிடிகள் அமைக்க திட்டங்கள் தயாாிக்கப்பட்டு வனத்துறை அனுமதிக்கு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இரும்பு பாலம் மற்றும் இரும்பு கைபிடி அமைக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.6.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இரும்பு பாலம், இரும்பு கைபிடி அமைக்க சாப்டூர் வனச்சரக அலுவலர் செல்லமணி, வனவர்கள் சின்னக்கருப்பன், ஜெய்சங்கர் உள்ளிட்டோா் களஆய்வு மேற்கொண்டனா். அப்போது சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பறை அறங்காவலா் ராஜா(எ) பொியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.