இடைத்தேர்தலில் அதிர்ச்சி தோல்வி: ஜே.பி.நட்டா தலைமையில் நாளை கூடுகிறது பாஜக தேசிய செயற்குழு கூட்டம்..!!

டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அசாம், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், இமாச்சல் பிரதேசம், மேகாலயா, பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 3 மக்களவைத் தொகுதிகள், 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 30ம் தேதி நடந்தது.

இதில் பெருமளவு காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்ற நிலையில், பாஜகவுக்கு இந்த தோல்வி மிகப்பெரிய சறுக்கலாக பார்க்கப்பட்டு வருகிறது.. இதுவே தற்போது சவாலாகவும் அக்கட்சிக்கு அமைந்துள்ளது. பாஜக மத்தியில் வலுவாக இருந்தும்கூட, இப்படி ஒரு அதிர்ச்சி தோல்வி என்பது பின்னடைவாகவே கருதப்படுகிறது..

இந்த நிலையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லியில் இருக்கும் பாஜக நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் காணொளி வாயிலாக பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்யவும், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Related Stories: