எடப்பாடி பழனிசாமி தற்போது பலவீனமாக இருக்கிறார்; அதனால் தான் வார்த்தைகளை பயந்து பயந்து பேசுகிறார்!: டி.டி.வி. தினகரன் விமர்சனம்

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பலவீனமடைந்துவிட்டதாகவும், அதனால் தான் வார்த்தைகளை பயந்து பயந்து பயன்படுத்துவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தின் இடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சசிகலா மற்றும் தனது நோக்கம் ஒன்றே என்றும் அது அதிமுகவை மீட்பது தான் என்றும் அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமி தற்போது பலவீனமாக இருப்பதாகவும், அதனாலேயே வார்த்தைகளை பயந்து பயந்து பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொண்டர்களின் மனநிலை பற்றியே தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பது வழக்கம். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் பலவீனம் அடைந்துவிட்டார் என்று டிடிவி தினகரன் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தையே தெரிவித்து இருப்பதாக கூறினார். அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்றும் கூட்டத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தோல்விகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: