×

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப 17,719 சிறப்பு பேருந்து வசதி.! சென்னையில் இருந்து சென்ற 6 லட்சம் பேர் திரும்ப ஏற்பாடு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சென்ற 6 லட்சம் பேர் திரும்ப சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். கடைகள் வைத்தும் தொழில் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் இங்கு தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி தீபாவளி பண்டிகை வந்தது. இதை முன்னிட்டு சென்னையில் இருந்து செவ்வாய், புதன் கிழமைகளில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால், அனைத்து ரயில்களில் முன்பதிவு தொடங்கிய அடுத்த நிமிடமே ரயில்கள் அனைத்தும் ஹவுஸ் புல் ஆனது. ஒவ்வொரு ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் அதிகமானவர்கள் இருந்து வந்தனர்.

இதை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அந்த ரயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமானது.  ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் பஸ்களை நோக்கி படையெடுத்தனர்.  இதனால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து ரயில்கள் மற்றும் பஸ்கள் மூலமாக மட்டும் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகை முடிந்து அவர்கள் சென்னைக்கு திரும்ப முடிவு எடுத்து திரும்பி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக அரசு 17,719 பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்க கூடிய 2100 பஸ்களுடன் நேற்று 643 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையை தவிர்த்து மற்ற இடங்களுக்கு 730 பஸ்கள் விடப்பட்டன. இன்றும் வழக்கமான 2100 பஸ்களுடன் சென்னைக்கு மட்டும் 913 சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. மற்ற ஊர்களுக்கு 900 பஸ்கள் இயக்கப்படுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு 2100 பஸ்களுடன் 1729 பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையை தவிர்த்து மற்ற ஊர்களுக்கு 2180 பஸ்கள் இயக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 8ம் தேதி (திங்கட்கிழமை) வழக்கமான 2100 பஸ்களுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 1034 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையை தவிர்த்து மற்ற இடங்களுக்கு 1190 பஸ்கள் விடப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் மட்டும் சென்னைக்கு மொத்தம் 6300 பஸ்களுடன் 3676 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையை தவிர்த்து வெளியூர்களுக்கு வழக்கமான பஸ்களுடன் 4270 சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. இதுபற்றி போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறுகையில், நாளையும், நாளை மறுநாளும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் பஸ் புறப்படும் நேரத்தை ஒலிபெருக்கியில் அறிவிக்க ஏற்பாடு செய்துள்ளோம். தகவல் மையங்களும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.86 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது” என்றார். மக்கள் கூட்டம் அதிகமாக வரும் பட்சத்தில் கூட்டத்தை சமாளிக்க மேலும் சிறப்பு பஸ்களை இயக்கவும் தமிழக அரசின் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Deepavali ,Chennai , 17,719 special buses for Deepavali returnees 6 lakh people who left Chennai have been arranged to return
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...