×

எத்தியோப்பியாவில் தீவிரம் அடையும் உள்நாட்டு போர்!: அமெரிக்கர்கள் நாடு திரும்ப அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தல்..!!

எத்தியோப்பியா: எத்தியோப்பியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால் அமெரிக்கர்கள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கிழக்கு ஆப்ரிக்காவில் அமைந்திருக்கும் எத்தியோப்பியா நாட்டில் அரசுக்கும், டைகிரே விடுதலை முன்னணி என்ற போராளி அமைப்புக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. டைகிரே மக்கள் விடுதலை முன்னணியை ஒடுக்குவதற்கு அந்நாட்டின் பிரதமர் அபி அஹமது உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அந்த அமைப்பு எதிராக 9 குழுக்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.

இதனால் அந்நாட்டில் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்து பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எத்தியோப்பிய மக்கள் அனைவரும் வெகுண்டெழுந்து போராளி அமைப்பினரை மண்ணுக்குள் புதைக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் அபி அஹமது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். வன்முறையை தூண்டும் வகையில் கருத்து கூறியதால் அவருடைய பதிவை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி எத்தியோப்பியாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள 9 குழுவினரும் எந்த வகையிலாவது ஆட்சியை கலைப்பதில் உறுதி பூண்டிருந்தால் போர் உச்சம் பெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : Civil War ,Ethiopia ,Americans , Ethiopia, Civil War, Americans
× RELATED எத்தியோப்பியாவில் இருந்து...