×

பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிமுறை மீறிய 2 கடைகளுக்கு சீல் வைப்பு-தலா ₹5000 அபராதம்

பரமத்திவேலூர் : பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 2 மளிகை கடைகளுக்கு காவல் துறையினர் சீல் வைத்து தலா ₹5,000 வீதம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை மற்றும் கல்லூரி சாலையில் 2 மளிகை கடைகள் அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பரமத்திவேலூர் டிஎஸ்பி ராஜா ரணவீரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது அரசின் விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முகச்கவசம் அணியாமல் மளிகை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 2 கடைகளுக்கும் சீல் வைத்ததுடன் கடை உரிமையாளர்களுக்கு தலா ₹5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர். மேலும், இது போன்று விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். பொதுமக்களும் காரணம் இல்லாமல் வெளியே வரக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்….

The post பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிமுறை மீறிய 2 கடைகளுக்கு சீல் வைப்பு-தலா ₹5000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Paramathivellur ,Dinakaran ,
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ