×

ஆர்யன் கான் மீதான வழக்கு டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு மாற்றம்: சர்ச்சைக்குரிய வான்கடேவுக்கு பழைய பதவி

புதுடெல்லி:  மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை விருந்து நடந்தபோது அதிரடியாக நுழைந்த மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு, பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரை கைது செய்தது. இந்த வழக்கை மும்பை மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவின் இயக்குனர் சமீர் வான்கடே விசாரித்தார். இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க இவர் ரூ.25 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பல பிரபல நடிகர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து இவர் ரூ.1000 ஆயிரம் பறித்து இருப்பதாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார்.

இதனால், வான்கடேவை மும்பை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்வார்கள் என்ற நிலை இருந்து வருகிறது. ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கிய நிலையில், இவர்கள் மீதான வழக்கின் விசாரணையை டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுக்கு மாற்றி, நேற்றிரவு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதால், வழக்கு விசாரணை மாற்றப்பட்டதாக கூறியுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு, வான்கடே தொடர்ந்து மும்பை மண்டல இயக்குனராக நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

Tags : Aryan Khan ,Delhi , Case against Aryan Khan transferred to Delhi Narcotics Division: Old post for controversial Wankhede
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த்...