×

வாழப்பாடி, கெங்கவல்லியில் கள்ளச்சாராயம் கடத்திய 8 பேர் கைது

சேலம் : சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த தும்பல் ஊராட்சியில் ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார், நெடுஞ்சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில் 14 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். போலீசாரின் விசாரணையில், அவர்கள்  திருப்பூர் அருள்நகர் வில்லியங்காடு பகுதியை சேர்ந்த சிதம்பரம் மகன் மோகன் (24), திருப்பூர் பெத்தலான்காடு 2வது வீதி கருவம்பாளையம் வெங்கடாஜலம் மகன் கோவிந்தவேல்(32)  என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தர்மபுரி மாவட்ட பகுதியில் முலாம்பழம் விற்க சென்றவர்கள், பழத்தை விற்று முடித்தவர்கள் வரும் போது அங்கு 14 லிட்டர் சாராயம் வாங்கி எடுத்து வந்துள்ளனர். இதையடுத்து வாகனத்துடன் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.கெங்கவல்லி: ஆத்தூர் ஊரக இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்ஐ அயப்பன், வெங்கடாசலம் உள்ளிட்ட போலீசார் நேற்று சாராய வேட்டையில் ஈடுபட்டனர். ராமநாயக்கபாளையம் ராமமூர்த்தி நகர் பகுதியில், கரியகோயிலை சேர்ந்த நடராஜ்(25) என்பவரிடம் 105 லிட்டர் சாராயம், டூவீலரும், சிவசங்கராபுரத்தில் மகேந்திரன்(25) மற்றும் கல்பனூரில் ராம்குமார்(29) ஆகிய இருவரிடம் 140 லிட்டர் சாராயம், 2 டூவீலர்கள், பிள்ளையார்பாளையம் மணிகண்டன்(25) என்பவரிடம் 50 லிட்டர் சாராயம் மற்றும் டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். அதே போல், கெங்கவல்லி அடுத்த சாத்தபாடி கிராமத்தில் கண்ணன் மனைவி சாந்தி(43) என்பவரது வீட்டில் 100 லிட்டர் சாராயமும், 74.கிருஷ்ணாபுரம் பகுதியில் சிவா(21) என்பவரிடம் 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய 2 பேரை தேடிவருகின்றனர். அதேபோல், வாழப்பாடி அடுத்த குன்னூர் வனப்பகுதியில் மலையில் 200 லிட்டர்  சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடி கும்பலை தேடி தேடுகின்றனர்….

The post வாழப்பாடி, கெங்கவல்லியில் கள்ளச்சாராயம் கடத்திய 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : kengavalli ,Salem ,Ethapur ,Inspector ,Kumaravel ,Salem district ,Valiapadi ,Bengavalli ,
× RELATED வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!