வெள்ளை மாளிகையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய பைடன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 40 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்,  அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தி்ல் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் தனது மனைவி ஜில் பைடனுடன் சேர்ந்து குத்து விளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார். இருவரும் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘இருளில் அறிவு, ஞானம் மற்றும் உண்மை உள்ளது என்பதை தீபாவளியின் ஒளி நினைவூட்டுகிறது,’ என்று கூறியுள்ளனர்.

Related Stories: