×

உபி.யில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மேலும் 30 பேருக்கு பாதிப்பு

நாகர்: உத்தரப் பிரதேசத்தில் மேலும் 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கடந்த மாதம் 23ம் தேதி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜிகா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  கான்பூர் மாவட்டத்தில் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, 36 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மேலும் 30 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 45 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள். இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாக் ஐயர் கூறுகையில், “ கான்பூர் மாவட்டத்தில் புதிதாக 30 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு லக்னோவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், வீட்டுக்கு வீடு  சென்று மாதிரிகள் சேகரிப்பு மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்பு சோதனை மேற்கொள்வதற்கும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.


Tags : Zika virus spreads fast in UP: 30 more infected
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...