இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்ரிக்கா டூர் அட்டவணை வெளியீடு

கேப் டவுன்: இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி அங்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான அட்டவணையை தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. முதல் டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் டிசம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. 2வது போட்டி ‘பாகிச்ங் டே’ டெஸ்டாக பிரிடோரியா, செஞ்சுரியன் பார்க் மைதானத்தில் டிச. 26ம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தென் ஆப்ரிக்காவில் தற்போது விளையாட்டு போட்டிகளை நேரில் காண 2000 ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்பது குறித்து, நிலைமைக்கேற்ப முடிவு செய்யப்படும் என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேதி    போட்டி    களம்

டிச. 17-21    முதல் டெஸ்ட்    ஜோகன்னஸ்பர்க்

டிச. 26-30    2வது டெஸ்ட்    பிரிடோரியா

ஜன. 3-7    3வது டெஸ்ட்    கேப் டவுன்

ஜன. 11    முதல் ஒருநாள்    பார்ல்

ஜன. 14    2வது ஒருநாள்    கேப் டவுன்

ஜன. 16    3வது ஒருநாள்    கேப் டவுன்

ஜன. 19    முதல் டி20    கேப் டவுன்

ஜன. 21    2வது டி20    கேப் டவுன்

ஜன. 23    3வது டி20    பார்ல்

ஜன. 26    4வது டி20    பார்ல்

Related Stories:

More