டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் இன்று முதல் மூன்று நாட்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். தொடர்ந்து, நாளையும் நாளை மறுநாளும் ஆலோசனை நடத்துகிறார். இதில் சட்டப்பேரவை தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தல் தோல்வி காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Related Stories: