பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: புதிய நீதிக்கட்சி வரவேற்பு

சென்னை: புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல், டீசல் விலை, கடந்த சில வாரங்களாக, ரூ.100ஐ கடந்தது. இரு சக்கர வாகனம் பயன்படுத்துவோர், லாரிகள் தொழிலில் உள்ளவர்கள் ஆகியோர், இந்த கடும் விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். இவற்றின் விலையை குறைக்க சொல்லி, மத்திய, மாநில அரசுகளை பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். மக்களின் துயரத்தை உணர்ந்த பிரதமர் மோடி, பெட்ரோல் மீதான விலை ரூ.5ம், டீசல் மீதான விலை ரூ.10ம் குறைத்த அறிவிப்பினை, மக்களுக்கு தீபாவளி பரிசாக அறிவித்துள்ளார். இந்த விலை குறைப்பின் பலனை மக்கள் அனுபவிக்க வேண்டுமானால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தாமல், மத்திய அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் வாழும் லட்சக்கணக்கான ஏழை, எளிய நடுத்தர மக்களின் துயரத்தை குறைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, புதிய நீதிக் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More