நீட் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க துரித நடவடிக்கை: தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை: எஸ்டிபிஐ கட்சின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு விவகாரத்தில் முறைகேடுகளும், மோசடியும் நடைபெற்று வருவது தொடர்ச்சியாக அம்பலமாகி வருகின்றது. தேனியை சேர்ந்த ராஜா முகமது என்பவரின் மகள் ஆயிஷா பிரோஸ் தேர்வு முடிவை கண்டு அதிர்ச்சியடைந்தார். தேர்வில் குறைந்தது 576 மதிப்பெண்களுக்கான விடையை சரியான முறையில் எழுதியிருந்தும் வெறும் 199 மதிப்பெண்கள் மட்டுமே மாணவிக்கு கிடைத்துள்ளது. இதேபோன்ற குற்றச்சாட்டுடன் கடையத்தை சேர்ந்த முப்புடாதி என்ற மாணவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆகவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஆயிஷா பிரோஸ் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More