சமீர் வான்கடே விடுவிப்பு: ஷாரூக் கான் மகன் ஆர்யன் மீதான போதைப்பொருள் வழக்கு சிறப்பு புனலாய்வு பிரிவுக்கு மாற்றம்

மும்பை: ஷாரூக் கான் மகன் ஆர்யன் மீதான போதைப்பொருள் வழக்கு சிறப்பு புனலாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் 2-ந் தேதி மும்பை- கோவா சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

இந்தநிலையில் ஆர்யன்கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது மராட்டிய மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். குறிப்பாக சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என தகவல் வெளியானது.

இதனையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். அதாவது ஆர்யனுடன் முன்முன் மற்றும் அர்பாஸ் மெர்ச்சன்ட் ஆகியோரும் ஜாமீன் பெற்றுள்ளனர். தற்போது ஆர்யன் மீதான போதைப்பொருள் வழக்கு சிறப்பு புனலாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது வழக்கை விசாரித்து வந்த அதிகாரி சமீர் வான்கடே விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: