கடலில் தவறி விழுந்த மீனவரை கண்டுபிடித்து தர மத்திய, மாநில அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

நாகை: வேதாரண்யம் அருகே கடலில் விழுந்த மீனவரை கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறை மீனவர் பழனி என்பவர் கடந்த 2-ம் தேதி மீன் பிடிக்க சென்று படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார், சக மீனவர்கள் உடனே தேடியும் அவர் கிடைக்காத நிலையில் இன்று 4-வது நாளாக மீனவர்கள் தேடி வருகின்றனர். மேலும் அவர் கரை திரும்பாததால் உயிரிழந்திருக்கலாம் என்று சக மீனவர்கள் கூறும் நிலையில் உடலை கண்டுபிடித்து தர மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.          

Related Stories: