×

இந்தியா- ஸ்காட்லாந்து அணிகள் துபாயில் இன்று பலப்பரீட்சை

துபாய்: 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்குகிறது. மாலை 3:30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோத உள்ளன. நடப்பு தொடரில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ளன.நியூசிலாந்து அணி 2 வெற்றிகளையும், நமீபியா ஒரு வெற்றியையும் வசப்படுத்தியுள்ளன.

இரவு 7:30 மணிக்கு துபாயில் நடைபெறும் போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது. அரை இறுதிக்கான பந்தயத்தில் நீடிக்க அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.             


Tags : Scotland ,Dubai , India-Scotland teams clash in Dubai today
× RELATED இங்கிலாந்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி